MARC காட்சி

Back
மலையக்கோயில் குடைவரை
245 : _ _ |a மலையக்கோயில் குடைவரை -
300 : _ _ |a குடைவரை
500 : _ _ |a மலையக்கோயில் குடைவரைக் கோயிலைப் பாண்டியர்கள் அமைத்தனர் என்பதனை இங்குள்ள கல்வெட்டில் காணப்படும் "ஸ்ரீவரமுடையார்" என்ற பெயரிலிருந்து அறியலாம். இங்குள்ள பெரிய குடைவரைக் கோயில் திருமயம் சிவன் குடைவரைக் கோயில் போன்று அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுக்காவில் மலையக்கோவில் எனும் ஊர் உள்ளது. இவ்வூரில் மலைமீது ஒரு முருகன் கோயில் உள்ளது. தைப்பூசம் அன்று இவ்வூரில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெறும். முருகன் கோயிலுக்குக் கீழே பக்கவாட்டில் ஒரு எளிமையான சிறியக் குடைவரைக் கோயில் உள்ளது. இக்குடைவரைக்கு வெளியே சற்று பெரிய நந்தியொன்றுள்ளது. இக்குடைவரையின் காலம் கி.பி. 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். குடைவரையின் முகப்பில் இடதுபுறமும், வலதுபுறமும் கல்லெட்டுகள் காணப்படுகின்றது. அக்கல்வெட்டுகளில் மிக முக்கியமானது " இசைக்கருவி" தொடர்பான கல்வெட்டே . குடைவரையின் வாசலில் இடது புறத்தில் ஒரு கட்டத்தில் பல்லவ கிரந்தத்தில் ஒரு கல்வெட்டுள்ளது. அது இசைத் தொடர்பான கல்வெட்டு ஒன்று உள்ளது. "பரிவாதிநிதா" இது ஒரு பொன் வீணையாக இருக்கலாம் என்றுக் கூறப்படுகிறது. இதே கல்வெட்டு இதே மாவட்டத்தில் திருமயம், குடுமியான்மலை ஆகிய ஊர்களில் இதே கல்வெட்டு காணப்படுப்படுகிறது. இக்கல்வெட்டு பல்லவர்கள் காலத்தியல். ("பரிவாதிநிதா) என்ற இசைக்கருவிப் பற்றியும் குறிப்பிடுகிறது. அதன் கீழே உள்ள தமிழ் கல்வெட்டில். "கற்கபடுவது காண் ஞ்சொல்லிய புதிற்பறக்கும் நிமி முக்கந்திருவத்துக்கும் உரித்து" வலதுபுறசுவற்றில் குலசேகர பாண்டியரின் கல்வெட்டுள்ளது. அக்கல்வெட்டில் "ஸ்ரீவரமுடையார்" என்ற பாண்டிய மன்னரன பராந்தக நெடுஞ்சடையன் என்பவரின் சிறப்புப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
510 : _ _ |a தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
520 : _ _ |a புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளதொரு ஊர் மலையக்கோயில். புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் உள்ள நச்சாந்துப் பட்டியை அடுத்துள்ள மலையக்கோயில் சாலைப் பிரிவிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் மலையக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள மலையின் மேல் இருபுறமும் இரு குடைவறைக் கோயில்களும் மலையில் பிற்காலத்தில் கட்டப்பட்ட முருகன் கோயிலொன்றும் உள்ளது. முருகனது கோயிலுடன் கூடிய மலையின் தோற்றம், தொலைவிலிருந்து வரும்பொழுதே கண்களுக்கு பெரும் விருந்தாகக் காட்சியளிக்கிறது. இதன் பழமையானப் பெயர் "திருவோதிக்கால்வாய்" எனப்படுகிறது. இங்கு நாவல் மரங்கள் பெருமளவில் இருந்தமையால் இது திருநாவலங்கிரி என்றும் அழைக்கப்பெற்றது. நாவல் மரமே இக்கோயிலின் தல விருட்சமாக அமைந்துள்ளது.
653 : _ _ |a தமிழ்நாடு, குடைவரை, குடவரை, குடைவரைக் கோயில்கள், தென்னகக் குடைவரைகள், தமிழ்நாட்டு குடைவரைக் கோயில்கள், பாண்டியர் குடைவரைகள், குகை, குகைக் கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை மரபுச் சின்னங்கள், புதுக்கோட்டை குடைவரைகள், மலையக்கோவில் குடைவரை, மலையக்கோயில் குடைவரை, மரபுச் சின்னம், தொல்லியல் சின்னம், வரலாற்றுச் சின்னங்கள்
700 : _ _ |a சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a மலையக்கோயில் |c மலையக்கோயில் |d புதுக்கோட்டை |f மலையக்கோயில்
906 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 10.376738057501
915 : _ _ |a 78.597761837089
934 : _ _ |a பொன்னமராவதி
995 : _ _ |a TVA_MON_00093
barcode : TVA_MON_00093
book category : குடைவரைக் கோயில்கள்
cover :
Primary File :

TVA_MON_00093/TVA_MON_00093_புதுக்கோட்டை_மலையக்கோயில்_குடைவரைக்-கோயில்-0001.jpg

TVA_MON_00093/TVA_MON_00093_புதுக்கோட்டை_மலையக்கோயில்_குடைவரைக்-கோயில்-0002.jpg

TVA_MON_00093/TVA_MON_00093_புதுக்கோட்டை_மலையக்கோயில்_குடைவரைக்-கோயில்-0003.jpg